இங்கிலாந்து அணி செயல்பாட்டை பெங்களூரு டிராபிக்குடன் ஒப்பிட்ட அஸ்வின்!

Advertisements

சென்னை:

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யூ டியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்து முழுமையற்ற கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் தொடர் தவறுகளைச் செய்தார்கள். இந்தியாவில் விளையாடும்போது ஒரே டெம்போவில் விளையாட முடியாது.

பெங்களூரு டிராபிக்கில் ஓட்டினால் எப்போதும் நான்காவது கியரில் இருக்க முடியாது. இங்கேயும் அதே லாஜிக் தான்.

சில நேரங்களில் பெங்களூரில் நான்காவது கியரில் கூடச் செல்ல முடியாது. இதேதான் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுதும் அதிரடியாக நான்காவது கியரில் விளையாட முடியாது.

இதைத்தான் நான் கடந்த முறையும் சொல்லி இருந்தேன். இந்தியாவில் பயமற்ற கிரிக்கெட் முறை தேவையானது. ஆனால் அது பவர் பிளேவில் மட்டும் இருக்க வேண்டும்.

எல்லா சூழ்நிலைகளும் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பொருந்தாது. கிரிக்கெட்டில் நிபந்தனைகளே ராஜா எனச் சொல்வார்கள் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *