Kosavankaradu: கணவனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மனைவி!

Advertisements

கணவனை  இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). லாரி டிரைவர். இவரது மனைவி மணிமுடி (35). இவர்களது மகள் கேந்திரியா (11) அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் சக்தி குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிமுடி கணவர் சக்தியை வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *