Koppampatti: காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி காதலன் கைது!

Advertisements

தனது காதலியான மாணவியை உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி உள்ளார்.

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன் (23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்தார். பின்னர் காதலிப்ப தாகக் கூறி எல்லை மீறினார். பல இடங்களில் வெளி யிடங்களுக்கு அழைத்துச் சென்று 2 பேரும் உல்லாச மாக இருந்துள்ளனர்.

இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். அவரது பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி அறிவுரையின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உதயராயன் தனது காதலியான மாணவியை உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி உள்ளார்.

மாணவியான சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்றேதெரியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போதுதான் உண்மை வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உதயராயனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டி கொல்லபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான திரவிய கோடீஸ்வரன் (29) என்பவரை தேடி வந்தபோது அவர் தலைமறைவானார்.

வெளியூரில் இருந்து ஊருக்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *