Kiran Rathod: என்னைப் பலபேர் படுக்கைக்கு அழைத்தார்கள்..பகீர் கிளப்பிய நடிகை!

Advertisements

சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கிரண்பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

2001-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். முதல் படத்திலே கியூட்டாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதைத் தொடர்ந்து வில்லன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கிரண்.

குறுகிய காலத்திலேயே கமல், விக்ரம், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கிரண் உச்சத்தில் இருந்த போதே காணாமல் போனார். நல்ல கதைகளைத் தேர்வு செய்யாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், பாடல்களுக்கு மட்டும் தோன்றினார்..

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய அவர் “ நான் ஒருவரை பைத்தியக்காரத்தனமாகக் காதலித்தேன்.அவரையே திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் என் காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்து போனேன். நான் சில காலம் சினிமாவிலிருந்து காணாமல் போனதற்கு இதுதான் காரணம்.

சினிமாவில் எல்லோரும் உண்மையான அக்கறை இருப்பது போல் நடந்து கொண்டார்கள் நல்ல கேரக்டரில் உங்களை நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசிய அன்றைய தினம் இரவு ஃபோன் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். இந்தச் சினிமா துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ” நான் எனது ஆப்-ஐ தொடங்கினேன். அதில் என்னுடைய கிளாமர் போட்டோஸ், வீடியோக்களைப் பதிவு செய்தேன். அதைப் பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லோரும் என்னைப் படுக்க அழைத்தார்கள். இப்படி நிறையே பேர் என்னை அழைத்தார்கள். என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நான் கவர்ச்சி படங்களைப் பகிர்வதால் அவர்கள் என்னைப் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

நான் மட்டுமா கவர்ச்சி போட்டோக்களைப் பதிவிடுகிறேன். கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் இப்படி கவர்ச்சி போட்டோக்களைப் பதிவிடுகின்றனர். நான் மட்டும் போட்டால் மொத்த மீடியாவும் என்னை டார்கெட் செய்கிறார்கள். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எனக்குப் பிடித்த ஆடைகளை உடுத்தி நான் போட்டோக்களைப் பதிவிடுகிறேன். நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே. கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *