சென்னையில் இன்று துவங்க இருக்கும் khelo India விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
முதன்முறையாக, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ் நாட்டில் இன்று துவங்க உள்ளது. இந்த மாதம் 31 ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ரோஜா மலர் கொடுத்து வரவேற்கப்பட்டது என்னை விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள்மூலம் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தி இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600- க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சோதனை விளையாட்டாக இடம்பெற உள்ளது.
இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்கத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
