Khalistan: இந்திய அதிகாரி மீது வழக்குப் பதிவு!

Advertisements

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக  இந்திய அதிகாரிமீது வழக்குப் பதிவு செய்துள்ளது அமெரிக்க போலீஸ்.அமெரிக்காவில் உள்ள சீக்கிய பிரிவினை வாதி ஒருவரை கொல்ல  இந்தியர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதியைக் கொல்ல இந்தியா சதி செய்ததாக அந்த நாடு அளித்த புகாரின் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி அர்த்தம் பாக்‌ஷி தெரிவித்துள்ளார்.கனடாவில்  வான்கூவரில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ ஏற்கனவே குற்றம் சாட்டினார்.

இதே போல் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாத தலைவர் குர்பத் வந்த் பன்னூன் மீது பல்வேறு தீவிரவாத வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குர்பத் வந்த் பன்னூனை கொலை செய்ய ஒருவர் முயன்றதாகவும் அவரை அமெரிக்க போலீசார் தடுத்து விட்டதாகவும், கொலை செய்ய முயன்றவர் இந்தியர் என்றும் விசாரணையில் தெரிய வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வந்தது.

அமெரிக்க அரசின் சட்ட அமலாக்க பிரிவு, இந்தியரான நிகில்  குப்தா  என்பவர் தான்  காலிஸ்தான் பிரிவினைவாதியும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குருபத்வன்த் சிங் பன்னூன் என்பவரை நியூயார்க்கில் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தக் கொலைச் சதிஉயானது இந்திய அரசின் பாதுகாப்பு மேலாண்மை அதிகாரி முன்னிலையில் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நவம்பர் 20ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரான பன்னூன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மண்ணில் குடியுரிமை பெற்ற ஒருவரைக் கொல்ல முயன்றது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இது தொடர்பாக இந்தியாவின் மிகவும் உயர்மட்ட அளவில் புகார் எழுப்பப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *