Kanchipuram – School Students: பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளி மாணவ. மாணவிகள் சிறப்பு வழிபாடு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி காஞ்சிபுரம் பாரதிதாசன் பள்ளி மாணவ. மாணவிகள் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி பள்ளியின் தாளாளர் அருண்குமார் தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம்,

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் செயலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *