Kallakurichi Kabaddi Players: கபாடி வீரர்கள் தேர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில்  20 வயதுக்குட்பட்ட 70 kg எடை கொண்ட மாநில அளவிலான கபாடி போட்டியில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் மாவட்ட அளவிலான கபாடி போட்டி தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழக தலைவர் பாண்டியன் மற்றும் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 14,15,16 ஆகிய தேதிகளில் கோயமுத்தூரில் மாநில அளவில் நடைபெறும் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் கபாடி வீரர்களைத் தேர்வு செய்யும் மாவட்ட அளவிலான கபாடி போட்டி இந்திலி தனியார் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு அமெச்சூர கபடி கழக மாநில கௌரவத் தலைவர் பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும்ராமச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 22க்கும் மேற்பட்ட அணிகள் 70 கிலோ எடை கொண்ட 240 கபாடி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

இந்தப் போட்டியில் மாநில அளவிலான போட்டியில் 12  வீரர்களைத் தேர்வு செய்யும்கபாடிபோட்டிநடைபெற்றது.இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளிலிருந்து 12 நபர்கள் மட்டும் தேர்வு செய்து வருகின்ற கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இதில் வெற்றி பெறும் நான்கு அணிகளுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட உள்ளது.இந்த மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள அணி வீரர்கள் கலந்து கொண்டனர் இந்தப் போட்டியினை நடுவர்களாகச் சிவகுமார், மோகன்ராஜ், சரவணன், அமுல்ராஜ், கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த் நடுவராகப் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *