mk.stalin:பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்!

Advertisements

சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாகச் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

* கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

* பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

* சாராயம் விற்பனை செய்த கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

* கள்ளச்சாராய உயிரிழப்புகுறித்து அறிந்து அமைச்சர்களை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

* கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதற்காக ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

* கள்ளச்சாராய மரணங்கள்குறித்த விசாரணை அறிக்கை கிடைத்த உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

* கள்ளச்சாராய விற்பனைக்குப் பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* எதிர்கால சமுதாயத்தைப் பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்.

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

* பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *