தீபிகா படுகோனின் தோற்றத்தைப் படக்குழு நேற்று வெளியிட்டது.
சென்னை:நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான “புஜ்ஜி” அறிமுகம் ஆனது.
நேற்று இப்படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், திஷா பதானியின் தோற்றம் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தெரிகிறது. இன்று மாலை கல்கி 2898 ஏடி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில், இந்தத் தோற்றம் தற்போது வைரலாகி வருகிறது.