10 நிமிடம் போதும் உங்க முகம் பளபளன்னு மின்னும்…

Advertisements
  • அன்றாட வாழ்விற்கு பயன்படும் சில எளிய குறிப்புகளை வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி சரி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
  • அத்திப்பழத்தை காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.நன்னாரி வேரைப் பொடியாக்கி தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
  • இஞ்சிச்சாறை கொதிக்க வைத்து, அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்துத் தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் குறையத் தொடங்கும்.பாதாம் பொடியைச் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • மருதாணி இலையைத் தயிர்விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். கச கசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் நன்கு அரைத்து அம்மை தழும்புள்ள இடத்தில் தடவி வந்தால் தழும்பு மறையும்.
  • கஸ்தூரி மஞ்சள், பயத்த மாவு, தயிருடன் கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஊற வைத்துப் பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
  • ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.பாலுடன் மஞ்சள் போட்டுக் காய்ச்சி காலை, மாலை தினமும் குடிக்க தொண்டை வலி போய்விடும்.
  • சிறிய வெங்காயத்தை மைய அரைத்துத் தலையில் தேய்த்து. சிறிது நேரம் கழித்து குளித்து வர உடம்பு குளிர்ச்சி பெறும். பொடுகும் காணாமல் போய்விடும்.வெந்தயத்தை ஊற வைத்து, நெல்லிக் காய் சேர்த்து அரைத்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர பொடுகு நீங்கும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *