
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார் என்று தெரிவித்துள்ளது.


