IT Raid: 2வது நாளாக சோதனை!

தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கி வரும் முக்கிய சப்ளையர்கள் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னை, சேலம், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாகச் சோதனை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *