இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சி.!

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரோடாக் பகுதியில் ரூபாய் 325 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி தொழிற்சாலையை, மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். அப்போது,  இந்தியாவில் பால்வளத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பால்வளத்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும், 2014-2015 ஆம் ஆண்டில் 8-கோடியே 60-லட்சமாக இருந்த கறவை மாடுகளின் எண்ணிக்கை, 11-கோடியே 20-லட்சமாக  அதிகரித்துள்ளது என்றும், பால் உற்பத்தி 14-கோடியே 60-லட்சம் டன்னிலிருந்து,  23 கோடியே 90-லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்றும், 8 கோடி விவசாயிகள் பால்வளத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆண்டுகளில் உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *