
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கு மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, எதிர்காலத்தில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கான பாதை ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒழுங்காற்று விதிகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காக மூன்று நிறுவனங்கள் ஏற்கெனவே உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இதற்கான சந்தை இருமடங்காகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிப் பேசிய அமைச்சர், தொழில்நுட்பத் துறையில் விரைவில் ரோபோக்களின் பயன்பாடு தொடங்கும் என்றும், உற்பத்தித் துறையிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் பயன்பாடு தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
அறுவை மருத்துவத்தை ரோபோக்கள் மூலம் செய்யும் ஒரு காலமும் வரும் என்று அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.


