இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 இருபது ஓவர் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.  இதில், இரு அணிகள் இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய வீரர்களும், மிச்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில், இந்திய அணி 17 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *