கனமழை எதிரொலி – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர்  ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர்   ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *