இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை பேரணி..!

சென்னையில் நாளை முக ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதில் , பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்ஹ்ட வேண்டிய நேரம் இது.பேரணி நடைபெறும் இடம் அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொஹ்டுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் பேரணி நடைபெறும்.

இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தை, தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கு பெற்று நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *