IAS, IPS அதிகாரிகள் விஜய்க்கு ஆதரவு – முதல்வர் உஷாராக இருக்க எச்சரிக்கை.!

Advertisements

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் ராயல்ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக அரசு உறுதி மொழி குழு தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார். அதன் பின்னர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான வேல்முருகன் பல்வேறு கட்சியில் இருந்து விலகி பலர் வாழ்வுரிமை கட்சியில் இணைகின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விஜய் சுமார் ஏழு மணி நேரம் தாமதமாக வந்துள்ளர். அதற்காக மக்கள் கூட்டம் காத்திருந்தனர். மயங்கி விழுந்தவர்களை விஜய் தொண்டர்கள் முறையாக முதல் உதவி சிகிச்சை செய்திருந்தால் பிழைத்திருப்பார்கள். கூட்டத்திற்கு உள்ளே ஆம்புலன்ஸை வருவதை தடுத்துள்ளனர். மூன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காயப்பட்டு உள்ளனர்.
இவை பார்த்தும் விஜய் தனது பேச்சை தொடர்கிறார்.

நடிகனுக்கு பின்னால் அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் பொதுமக்கள் சென்று புதிய வரலாறு தமிழகத்தில் இல்லை.  ஒரு நியாயமான அறிவிப்பை அவர் விடுத்திருக்க வேண்டும் இதற்கு மாறாக நையாண்டி பாணியில், நக்கல் பாணியில் திரைப்படத்தில் கதாநாயகன் இருக்கின்ற போது தனக்கு வில்லனாக இருப்பவரிடம் டயலாக் பேசுவது போன்று பேசி இருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழக பொது மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்களை விட்டு வந்த பொதுமக்களும் ரசிகனும் செத்து கிடந்த போது நீங்கள் பாதுகாப்பாக இடத்திற்கு சென்றீர்கள்.சினிமா நடிகர்கள் நாடாள அழைப்பதும் அவருக்காக உயிரை தியாகம் செய்வது ஏற்றுக்கொள்வதில்லை. அந்த இறப்புக்கு விஜயையும் . கட்சியும் தான் பொறுப்பை தட்டு கழிப்பது ஏற்புடையது அல்ல.

விஜய் காப்பாற்றுவதற்காக அவசர அவசரமாக ஹேமாமாலினி, நிர்மலாசீதாராமன் வந்து அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. விஜய் கைது செய்யாதது ஏன் என திருமாவளவன் எழுப்பி இருப்பதை நியாயமான கேள்வி ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பேசி விஜயை எப்.ஆரில் சேர்க்கக்கூடாது என கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

கரூரில் ஆயுத பூஜைகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை ஆனால் விஜய் பயணித்த பேருந்துக்கு பூக்கள் வைத்து ஆயுத பூஜை கொண்டாட்டம். ஒரு விழிப்புணர்வு இல்லாத கூட்டம் தமிழகத்தில் உண்டாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல. பணம் இருப்பது என்பதற்காக நஷ்டஈடை அறிவித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்.

ஒரு சில காவல்துறையினர், சென்னையில் தலைமையில் உள்ள சிலர் விஜய்க்கு ஆதரவாக செயல்படுகின்றனர். முதல் விஜய் கூட்டத்திலேயே ரோட் ஷோ தடை செய்ய வேண்டும், அன்றைக்கு தடை போடுங்கள் என்று சொன்னேன் போடவில்லை அதனால் இன்று 41 பேர்கள் போய் உள்ளது.

அமித்ஷா போன்றவர்கள் தலையிடுகின்றனர் என்பதற்காக யாரையும் தப்பவிட கூடாது. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். கேரளாவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தமிழர்களை கேவலமாக பதிவிட்டுள்ளது. எப்படிப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டாலும் தமிழக மக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று நிலைகள் தான் அந்த வீடியோ உள்ளது.

மறைமுகமாக முதலமைச்சரிடம் இருந்து கொண்டு சிலர் முதலமைச்சரை வீழ்த்த வேண்டும் என ஆர் எஸ் எஸ் மற்றும் டெல்லியில் தொடர்பில் உள்ள அதிகாரிகள் கட்சிதாமாக சில காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆகிய IAS, IPS அதிகாரிகள் விஜய்க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் எனவே முதல்வர் உஷாராக இருக்க வேண்டிய தருணம் ஒன்றிய அரசு இதனை வைத்துக்கொண்டு உங்கள் மிரட்டலாம்.

விழித்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சரை நான் எச்சரிக்கிறேன் என தெரிவித்தார். பேட்டியின் போது நிர்வாகிகள் ராயல் ராஜா, வழக்கறிஞர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *