சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை!

Advertisements

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் குளிர் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *