Guinness World Records: முதல் இடம் பிடித்த மூதாட்டி!

Advertisements

கேரள மூதாட்டி குஞ்சீரும்மா உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். அவரைப் பின்னுக்கு தள்ளிக் கேரள மூதாட்டி குஞ்சீரும்மா உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

குஞ்சீரும்மா பள்ளிக்குச் செல்லவில்லை. அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகி உள்ளது. கலம்பன் செய்தலி என்பவரைத் திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுக்கு மொத்தம் 13 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அவர்களில் 7 பேர் இறந்து விட்டனர். 5 தலைமுறைகளைக் கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *