
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 100 ரூபாய் அதிகரித்து, 14 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு சவரன் 800 ரூபாய் அதிகரித்து, ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




