Sankarapuram: வாயில் நுரைதள்ளி உயிரிழந்த ஆடுகள்!

சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் வாயில் நுரைதள்ளியபடி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் அப்பாதுரை இவருக்கு அதே கிராமத்தில் கல்வராயன் மலை அடி வரப் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அத்தகைய விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தாய்  மகளிர் சுய உதவி குழுக்களிலிருந்து பணம் பெற்று முதலில் ஐந்து ஆடுகள் வாங்கியுள்ளார். பிறகு ஆடு வளர்ப்பில் மிகவும் ஆர்வம் காட்டிய தாயும் மகனும் தற்போது அவர்களிடம் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து ஒரு வாரக் காலமாகத் திடீர் திடீரென ஒவ்வொரு ஆடுகளாக மயங்கிக் கீழே விழுந்து வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பாதுரை புதுப்பாலப்பட்டு கால்நடை மருத்துவரை அணுகி தனது ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்துள்ளது வந்து சிகிச்சை அளிக்குமாறு கூறியதை அடுத்து கால்நடை மருத்துவர் உரிய சிகிச்சை அளித்தும்  சிகிச்சை பலனின்றி சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள்   உயிரிழந்துள்ளன. மேலும் தனது பட்டியிலிருந்து ஆடுகள் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்ததால் பதறிப்போன அப்பாதுரை சங்கராபுரம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழந்து அதனை உரிய விசாரணை செய்து குற்றவாளி கைது செய்ய வேண்டுமெனப் புகார் மனு ஒன்று அளித்தார்.

புகாரைப் பெற்ற சங்கராபுரம் காவல்துறையினர் யாராவது விஷ மருந்துகளை வைத்து ஆட்டைக் கொன்றுள்ளனரா அல்லது விஷச் செடிகள் கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளதாக எனச் சங்கராபுரம் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விவசாயக் கூலித் தொழிலாளி வளத்துவந்த பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாயில் நுரை தள்ளுபடி உயிர் இருந்ததால் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *