GOAT Vijay:விஜய்யின் ‘கோட்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு!

Advertisements

‘கோட்’ படத்தின் 2வது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை:நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கோட்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் 2வது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை பாடல் வெளியாகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *