
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
‘காந்தாரா: சாப்டர் 1’என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மொத்தம் 250 நாட்களுக்கும் மேல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இந்தப் படத்துக்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.



