
சில சமயம் ஒரே இடத்தில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கை கால் மரத்துப் போவது என்பது சாதாரண விஷயம் தான்.
இருந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனைக்கு பலகாரணங்கள் உள்ளது. மரத்து போவது என்பது நோய் அல்ல என்றாலும் நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
இந்த பிரச்சனையை நாம் சாதாரணமாக நினைக்காமல் வீட்டில் இருந்தபடியோ அல்லது மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றாவது இதற்கான சிகிச்சை(Numbness Treatment in Tamil) முறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அதற்கான பக்கவிளைவுகளை தாங்கள் தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
வேப்ப எண்ணெய்;
இப்போது அனைவரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கை கால் மரத்துப்போதல். இந்த பிரச்சனையை எளிமையான முறையில் நம் வீட்டில் இருந்தபடியே சரி செய்ய வேப்ப எண்ணெய் மிக சிறந்த ஒன்றாக விளங்குகிறது.
50 மில்லி வேப்ப எண்ணெய் இரண்டு அல்லது மூன்று கற்பூரத்தை பொடி செய்து கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின் மறுநாள் காலை அவற்றை எடுத்து உடலில் எங்கு மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறதோ, அங்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர இந்த கை கால் மரத்துப்போதல் பிரச்சனை சரியாகிவிடும்.
கால்கள் மற்றும் கைகள் பராமரிப்புக்கு என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்பதை பார்க்கலாம்.
Tips to care hands and feet in tamil
முகத்தை விட கையும், காலும் கருப்பா இருக்கா, சூரிய ஒளி தவிர, உங்கள் கைகளையும் கால்களையும் கருப்பாக்கும் காரணங்கள் பல உள்ளது. சரும சுத்திகரிப்பு, தோல் மீது தூசி படிவது, மாசு மற்றும் அழுக்கு படிவது போன்றவை ஆகும்.
சருமம் போன்றவற்றை சுத்தம் செய்யும் போது கைகள் மற்றும் கால்களையும் சுத்தமாக்கும் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்தையும் அளிக்கும். அழகையும் கொடுக்கும்.
கால் பராமரிப்பு, பாத பராமரிப்பு என்பது சுகாதாரம் குறித்த விஷயங்களில் முக்கியமானது. சிலர் குளிக்கும் போது குனிந்து பாதங்களை சுத்தம் செய்வதில்லை. அதனால் அழுக்குகளும் பொலிவும் குறைந்து விடுகிறது.
ஆனால் வழக்கமாக அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பாதங்கள் அழகாக மாறலாம் பாதங்களில் பித்த வெடிப்புகள், இறந்த செல்கள் தங்கியிராமல் பார்த்துகொள்ளலாம். பிறகு கால்கள் அழகாக பொலிவாக இருக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.
அசிட்டோன் அல்லாத நெயில் பாலிஷ் ரிமூவரை மட்டும் பயன்படுத்துங்கள்.
வெட்டுக்காயங்களை மென்மையாக மசாஜ் செய்து தடம் இல்லாமல் குணப்படுத்தவும்.
கால்களில் சருமத்தின் ஈரப்பத நிலையை தக்க வைத்து கொள்ளும் வகையில் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். மாய்சுரைசர் ஷியா, கொகோ பட்டரை தேர்வு செய்யுங்கள்.
நகங்களை அதிக அழுத்தத்தோடு தேய்க்காமல் ஒரே திசையில் வெட்டிவிடுங்கள்.
வாரம் ஒருமுறை பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்யுங்கள்.
பாதங்களை ஸ்க்ரப் செய்வதற்கு ப்யூமிஸ் கற்களை பயன்படுத்துங்கள். ஸ்க்ரப் செய்வதன் மூலம் பாதங்கள் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.
தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சுத்தமான தேங்காய் எண்ணெய் பாதத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
ஓய்வு கிடைக்கும் போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து கல் உப்பு சேர்த்து பாதங்களை நனைத்து எடுங்கள்.கைகள் பராமரிப்பு;
கைகள் உண்மையில் தூய்மையை வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு ஆகும். கடுமையான குளிர், அதிக வெப்பம், மோசமான பராமரிப்பு, அழகு சாதன பொருள்களின் பயன்பாடு உங்கள் கைகளின் தோலை சேதப்படுத்தும்.
கை பராமரிப்பு குறிப்புகள்;
கைகளில் காயங்கள், நகங்கள் உடைதலுக்கு தாவர எண்ணெய்களை கொண்ட க்ரீம் தடவி எடுக்கவும். கைகளில் சுருக்கங்களை தவிர்க்க நாள் முழுவதும் கைகளை ஈரப்பதமாக வைத்திருப்பது நல்லது.
கைகளில் மாய்சுரைசர் செய்வதற்கு கோகோ பட்டர், ஷியா பட்டர் பயன்படுத்தலாம்.
இது ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தவை வைட்டமின்கள் நிரம்பியவை. இது சருமத்தின் மேல் அடுக்கில் ஒரு பாதுகாப்பு சுற்றை உண்டாக்குகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், நீரேற்றமாகவும் உள்ளது. குளியலுக்கு பிறகு இந்த கோகொபட்டர் பயன்படுத்தலாம்.
கைகளில் இருக்கும் இறந்த சருமத்தை அகற்ற வாரம் ஒரு முறை கைகளுக்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். சூரியனின் ஒளி கைகளில் படாமல் இருக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்.
பருவால் உண்டான கருப்பு தழும்பை போக்க உதவும் 2 பேக், பாதிப்பில்லாமல் சீக்கிரம் பலனும் கொடுக்கும்!
ரெட்டினோல் கொண்ட மாய்சுரைசரை இரவு நேரத்தில் பயன்படுத்துங்கள். கைகள் அடிக்கடி வறண்டு போவதை கொண்டிருப்பவர்கள் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்த க்ரீம் வகைகளை பயன்படுத்தலாம்.




