பூந்தமல்லியில் புதிதாகப் பாடி கட்ட வந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் நான்கு புதிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை நசரத்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான புதிய வாகனங்களுக்குப் பாடி கட்டும் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் புதிதாக வாங்கப்பட்ட நான்கு வாகனங்கள் பாடி கட்டுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இன்று வாகனங்களுக்குப் பாடி கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு வாகனத்திலிருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அந்தத் தீயை அணைக்க முயற்சி செய்வதற்குள் தீயானது மள மளவென எரிய ஆரம்பித்து மற்ற வாகனங்களுக்கும் பரவியது.
இதுகுறித்து ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் தீயணைப்பு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பல மணி நேரம் போராட்டங்களுக்குப் பின்பு கம்பெனியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் புதிதாகப் பாடி கட்டுவதற்காக வந்த நான்கு புதிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் தீப்பரவிக் கொண்டிருந்தபோது உள்ளே இருந்த சில வாகனங்களை ஊழியர்கள் மீட்டதால் சில வாகனங்கள் தீயிலிருந்து தப்பியது.
மேலும் தீ விபத்தில் கம்பெனியில் இருந்த ஏராளமான பொருட்கள் முற்றிலும் இருந்து நாசமானது தீ விபத்துக்கான காரணம்குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
