
இந்தியா, மலேசியா கூட்டு பயிற்சியில் 120 ராணுவ வீரர்கள் பங்கேற்பு!
கவுகாத்தி: இந்திய, மலேசிய ராணுவ வீரர்களின் கூட்டு இருதரப்பு பயிற்சி மேகாலயாவின் உம்ராய் கன்டோன்மென்டில் தொடங்கியது. ‘ஹரிமாவ் சக்தி 2023’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய, மலேசிய ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கூட்டு இருதரப்பு பயிற்சி நவம்பர் 5ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் மலேசிய ராணுவத்தின் 5வது ராயல் பட்டாலியனை சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் ராஜ்புத் ரெஜிமண்ட் பட்டாலியன் வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.Exercise Harimau Shakti 2023
இருநாடுகளை சேர்ந்த 120 பேர் பங்கேற்கும் கூட்டு பயிற்சி இருநாடுகளின் ராணுவ திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. காடுகள், பாதி நகர்ப்புறங்கள், நகர்ப்புறங்களில் பணி செய்தல், உளவுத்துறை நுண்ணறிவு சேகரிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரப்புதல் ஆகியவை தொடர்பான ஒத்திகைகளை இருதரப்பினரும் மேற்கொள்கின்றனர்.



