எடப்பாடி இல்லாவிட்டால் அதிமுக என்ன ஆகும்? அதிர்ச்சி தரும் பரபரப்பு ரிப்போர்ட்..! 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை குறிவைத்து அவரை எப்படியாவது தலைமை பீடத்தில் இருந்து கீழே தள்ளி விட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் நினைப்பது போல் அதிமுக தலைமை பதவியிலிருந்து எடப்பாடி விலகி விட்டால் அல்லது நீக்கப்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன .
எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் , கொடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமிதான். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் ஆன செங்கோட்டையன்.
அதிமுகவை எப்படியும் ஒருங்கிணைத்து விடுவேன் அதுதான் எனது முக்கிய வேலை என்கிறார் ஓ பன்னீர்செல்வம் . நிச்சயமாக அதிமுக ஒருங்கிணைக்கப்படும் அனைத்துமே சர்ப்ரைஸ் ஆக நடக்கும் என்று சபதம் எடுத்துப் பேசி வருகிறார்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா .
இதுவல்லாமல் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகள் எதிர்க்கட்சிகளின் சவால்கள் என பல்வேறு கோணங்களில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கப்பட்டு வருகிறார் . ஆனால் ஒவ்வொரு விஷயங்களையும் வெற்றிகரமாக அவர் கடந்து வருகிறார் என்பதை மறுப்பதற்கு இல்லை .
இதற்கிடையே சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவது எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் பேசி வருகிறார்கள். அதாவது எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக என்பது தான் இவர்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது . இவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற வகையில் அவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த அதிமுகவையும் தனது வசமாக்கிக் கொண்டு தன்னை மிகப்பெரிய ஆளுமையாக எடப்பாடி பழனிச்சாமி காட்டிக் கொள்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை . இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் தங்களில் ஒருவர் வரத் துடிக்கிறார்கள் . இதனாலையே ஆளுக்கு ஒரு திசையில் நின்று எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி சரமாரியாக அம்புகளை வீசுகிறார்கள் .
ஆனால் அதே சமயத்தில் இவர்களின் ஆவேச குரல்கள் மற்றும் பேட்டிகள் எதையும் அதிமுக தொண்டர்கள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை . அவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமியை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் டிடிவி தினகரன் செங்கோட்டையன் ஓ பன்னீர்செல்வம் சசிகலா ஆகியோரின் குரல்கள் எடுபடாமல் இருக்கிறது .
தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை தன்மை தான் அதிமுகவை வழிநடத்தி செல்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தவிர இன்றைய சூழலில் கட்சியை வழி நடத்திச் செல்லும் ஆற்றலும் அதிகாரமும் வேறு யாரிடமும் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
எடப்பாடி பழனிச்சாமியை எதிர்ப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி மேல் இடத்தை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பாஜக மேல் இடம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி விடலாம் என நினைக்கிறார்கள் . ஆனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா இடையே ஏராளமான புரிந்துணர்வுகள் இருக்கின்றன .
முன்னதாக பாரதிய ஜனதா கட்சி வசம் 16 சதவீத ஓட்டுகளும் அதிமுக தரப்பில் 21% ஓட்டுகளும் சேர்த்து தங்களை வெற்றி கோட்டைக்கு அழைத்துச் செல்லும் என பாஜக தலைமை நம்புகிறது . தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் திறமைசாலியாகவும் வளர்ந்து விட்டார்.  எத்தகைய சூழலையும் சாதுரியமாக சமாளிக்க கற்றுக் கொண்டு விட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
எத்தனையோ துரோகிகள் எட்டப்பன்கள் நம் இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.  மக்கள் மற்றும் தொண்டர்கள் துணையோடு அத்தனை துரோகிகளையும் முறியடிப்போம் . அதிமுகவை எந்த கொம்மானாலும் ஆட்டவோ , அசைக்கவோ முடியாது என குரல் கொடுக்கும் எடப்பாடியின் பேச்சுக்கு தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் ,
எடப்பாடி பழனிச்சாமி அல்லாமல் செங்கோட்டையன் சசிகலா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் என யார் கையில் அதிமுக போனாலும் கட்சி அழிந்துவிடும் என்கிற பயமும் பீதியும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது . எடப்பாடி பழனிச்சாமி இல்லாமல் வேறு யாராலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது. அப்படிப்பட்ட ஆளுமை திறன் கொண்ட தலைவர்கள் தற்போது யாரும் இல்லை என்று அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *