என்ஜினீயரிங் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை!

Advertisements

திருப்பதி:

தெலுங்கானா  மாநிலம் இப்ராஹிம் பட்டினம் பகுதியில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி உள்ளனர்.

அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மாணவி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மாணவியின் அறை கதவைத் தட்டினார்.

விடுதியில் பணிபுரியவர்கள் தான் வந்திருப்பார்கள் என நினைத்த மாணவி கதவைத் திறந்தார்.

கதவைத் திறந்ததும் மாணவியை உள்ளே தள்ளிவிட்டு மர்ம நபர் கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டார். மாணவியைத் தாக்கி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்தார்.

மர்ம நபர் சென்றபிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மாணவி கதறி அழுதார்.

இதுகுறித்து போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார். நடந்த சம்பவம்பற்றித் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

படுகாயங்களுடன் மாணவியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவரைத் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *