அண்ணாமலை கண்டனம்!

Advertisements

K.Annamalai | En Mann En Makkal | Virudhunagar | Bharat Mata Statue

விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்…

சென்னை : பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையைச் சுவர் ஏறிக் குதித்து காவல் துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்குச் சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

K.Annamalai | En Mann En Makkal | Virudhunagar | Bharat Mata Statue

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் “என்மண் என் மக்கள்” யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *