Education: வருகிற 15-ந்தேதி முதல் காலாண்டுத்தேர்வு!

தமிழகத்தில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை: 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்புவரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளுக்குப் பொது வினாத்தாள் முறையைப் பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நடைபெறஉள்ளகாலாண்டுத்தேர்வில்அமல்படுத்தஇருக்கிறது.அதற்கேற்றாற்போல், தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்குக் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணிவரைக்கும், பிளஸ்-2 வகுப்புக்குப் பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணிவரைக்கும் நடக்கிறது.

6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற செப்டம்பர் 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்குப் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

அதிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 22-ந்தேதி உடற்கல்வி தேர்வு புதிதாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *