
எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சாலைமேட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் இந்த ஆண்டு சேர்க்கை தொடங்காததைக் கண்டித்து மாணவர்கள் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் செழியனிடம் பேசியதாகவும் ஒரு வாரத்திற்குள் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறப்பட்டு சேர்க்கை நடைபெறும் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுக பயத்தில் உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பொன்முடி, எடப்பாடி பழனிச்சாமி தான் பயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.




