நண்பர்களுடன் சாப்பிட்ட போது ஓட்டலில் சரிந்து விழுந்த ஹாலிவுட் நடிகை!

Advertisements

நியூயார்க்: கிராமிய விருது பெற்றவரும், அமெரிக்க பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான டோரி கெல்லி, தனது நண்பர்களுடன் டவுன்டவுன் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சுயநினைவை இழந்துள்ளதாகவும், அவரது முக்கிய உறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பெற்று உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். உணவகத்தில் டோரி கெல்லி சரிந்து விழுந்த சம்பவம், ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *