TNPSC Group1 2024: 90 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு அறிவிப்பு… எப்போது தெரியுமா?

Advertisements

சென்னை: 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் குரூப் 1 தேர்வுகள்மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *