Parliamentary Election 2024: வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Advertisements

நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கு மேற்பட்டோர் 18-19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 47 கோடி பெண்கள் வாக்காளர்கள், 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடி ஆக இருந்தது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அத்துடன் 1.5 கோடிக்கு அதிகமான பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *