Panruti: வீடியோ வெளியிட்டுத் திமுக பிரமுகர் குமுறல்!

இரவு 10 மணிக்கு விழுப்புரம் சாலையைக் கடந்து திருப்பதிக்கு சென்ற காருக்கு மறுநாள் மாலை 5 மணிக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினரின் அவலநிலையை  சமூக வலைதளத்தில்  திமுக பிரமுகர் ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலாகிவருகிறது,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சேர்ந்தவர் திமுக பிரமுகர் விக்கி. இவர் நேற்று 6-ந் தேதி இரவு ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்வதற்காகத் தனது காரில் பண்ருட்டியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் போக்குவரத்து காவல்துறையினர் திமுக பிரமுகர் விக்கியின் காரைச் சோதனைபடுத்தி உரிய ஆவணங்களைச் சரிபார்த்து கார் எண்ணைப் பதிவு செய்தபின்னர் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் மறுநாள் 7-ந் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு கார் சென்ற நிலையில், அன்று மாலை 5 மணிக்கு விக்கியின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் தற்போது விழுப்புரம் வழியாகச் சென்ற தங்களின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்கித் தனது கார் தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள நிலையில், விழுப்புரத்தில் சாலையைக் கடந்ததாகவும், காருக்கு ரூபாய் 1500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறுந்தகவல் வந்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும், இதனை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் சமூக வலைத்தளத்தில் திமுக பிரமுகர்வீடியோ பதிவேற்றுள்ளார்.

இந்த வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வரும் நிலையில் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *