DMK Announcement: தேர்தல் அறிக்கை தயார் செய்திட குழு அமைப்பு!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திடவும், தேர்தல் அறிக்கை தயார் செய்திடவும் குழு அமைத்துத் திமுக தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், திமுக சார்பாகத் தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

தலைமை: கனிமொழி கருணாநிதி எம்.பி. (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)  டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்) ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்) டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்) கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்) கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.  சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்) எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்) மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (கழக மருத்துவ அணிச் செயலாளர்) மாண்புமிகு மேயர் பிரியா

இதே போல 2024- நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்,  கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்,

தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக பொருளாளர்  டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்,

குழுத் தலைவர்: திரு. டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்)

குழு உறுப்பினர்கள்:
திரு.கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்) திரு. இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு.க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *