
உடல் வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றத்திற்கு ஏற்றார்போல் உணவு முறைகள்.
வளரும் டீனேஜ் பெண்களுக்கு அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றத்திற்கு ஏற்றார்போல் உணவு முறைகள் அவசியமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைப்பதுண்டு. ஆரோக்கியமான உணவு உடல் நலத்தை பாதுகாப்புடன் வளர்ச்சிக்கும் உதவுவது. பெண் குழந்தைகள் பருவமடைவதுடன், அவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுவதால் அதற்கு ஏற்ற உணவு முறைகளும் அவசியமாகிறது.
பொதுவாக இளம் பெண்களின் பருவமடையும் காலத்தில் மாதவிடாய் செயல்பாடு, ஹார்மோன் வளர்ச்சியில் ஏற்படும் சிக்கல்கள் கடைசி வரை இருந்து பிரச்சனையை ஏற்படுத்தும் எனக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கச் சில உணவு முறைகளைப் பரிந்துள்ளனர்.
அதன்படி, பெண்களின் ஹீமோகுளோபின் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து அவசியமாகிறது. இந்த இரும்பு சத்துகளை முருகை கீரை மூலம் பெறலாம். தினமும் உணவில் ஒரு டீஸ்பூன் முருகைக்கீரை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அடுத்ததாக ஆளி விதைகளில் இரும்பு, மக்னீயம், வைட்டமின் சி, இ, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருப்பதால் ஹார்மோன் சுரப்பிற்கு ஆளிவிதைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்தி பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகளவில் இருப்பதால், அது ரத்தத்தை சுத்தரிகரிக்க கூடியது. ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்க கூடியது. இதனால் வளரும் இளம் பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அத்திப்பழத்தை அதுவும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவைகள் மட்டுமில்லாமல் பெண்களுக்கு எலும்பைப் பலப்படுத்தும் குறித்த உணவுகளும் அவசியமாகிறது. 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படலாம். அதைத் தடுக்க இளம் வயதிலேயே கால்சியம் நிறைந்த உணவு முறைகளை எடுத்துக் கொள்ளலாம். பால், தயிர், சீஸ், ப்ரோகோலி, காலே போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்து கொள்ளலாம்.
உடல் எடையைச் சீராகப் பராமரிக்கச் சிவப்பரிசி, குயினா, ஓட்ஸ், பழங்கள், பருப்பு வகைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு முறைகளைத் தினமும் கடைப்பிடித்து வந்தால் வளர் இளம் பருவ பெண்கள் ஆரோக்கியமாக வாழலாமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
