Dharsha Gupta: ரசிகர்களை ஏங்க வைத்த தர்ஷா குப்தா!

Advertisements

நடிகையும் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் போட்டியாளராக விளையாடி வரும் தர்ஷா குப்தாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். படங்கள், வெப் சீரிஸ்கள் எனத் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் தர்ஷா குப்தா தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். இது அவரது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான தலைமைச் செயலகம் வெப் தொடரில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இதில் பரத்க்கு ஜோடியாக நடித்துப் பலரது கவனத்தினை ஈர்த்திருந்தார். மிடுக்கான போலீஸாக நடிப்பில் அசத்தியிருந்தார்.

ஓ மைக்கோஸ்ட் படத்தில் கவர்ச்சியில் மிரட்டிய தர்ஷா குப்தா, தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் யோகிபாபு உடன் நடித்துள்ளார் எனவும், இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகின்றது.

தர்ஷா குப்தா தமிழ் சினிமா உலகில் கிளாமர் கதாபாத்திரங்களை மிகவும் தைரியமாக ஏற்று நடிக்கக்கூடிய நடிகையாக வளம் வருகின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியே இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

தர்ஷா குப்தா அவ்வப்போது தான் ஃபோட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் போட்டிக்குச் சென்றுவிட்டதால் அவரது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிடமாட்டாரோ என ரசிகர்கள் ஏங்கிவந்தனர்.

ரசிகர்களின் ஏக்கத்தினை ஏற்கனவே யூகித்த தர்ஷா குப்தா முன்னதாகவே பல ஃபோட்டோ சூட்கள் நடத்தியிருந்தார். தற்போது அவையெல்லாம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் அவர் பிக் பாஸ் நாமினேசனில் இடம் பெறவில்லை. வரும் வாரங்களில் அவர் நாமினேசனுக்கு வந்தால், அவரது ஃபாளோவர்ஸ்கள் அவருக்கு வாக்களித்துப் போட்டியில் தொடர்ந்து விளையாட வைப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.

தான் பகிரும் புகைப்படங்களுக்கு அழகாகத் தமிழில் கேப்சன் இடுவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார். கடைசியாக அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு, ‘நீ தேட வேண்டியதில் தெளிவாக இரு, நீ அடைய வேண்டியது உன் விழியின் அருகில் நிற்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *