Delhi:நுழைவுத் தேர்வில் தோல்வி…7 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி வீடியோ!

Advertisements

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் JEE நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் நடந்த JEE நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த மாணவி, ‘என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதைச் செய்ய முடியவில்லை, என்னால் JEE பரீட்சையை ஜெயிக்க முடியவில்லை’ என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீடுள்ள 7 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் மாடியிலிருந்து குதித்து கீழே விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படடுத்தி வருகிறது.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகிறனர். தான் இந்தப் பரீட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உயிரிழந்த சிறுமி தனது தாயிடம் ஏற்கனவே கூறியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

https://x.com/HYDNetizensNews/status/1850128146986934513

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *