Delhi:ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- 4 பேர் கைது!

Advertisements

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் 500 கிலோவுக்கும் அதிகமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு சர்வதேச கடத்தல் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், சர்வதேச போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத கும்பலுக்குத் தொடர்பா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி சிறப்பு காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 400 கிராம் ஹெராயின் மற்றும் 160 கிராம் கோகோயின் போதைப்பொருளை கைப்பற்றிய இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தலைநகரில் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *