மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

Advertisements

M. G. Ramachandran Statue | D. Jayakumar

பெயிண்ட் ஊற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முடியாது எனவும், பெயிண்ட் ஊற்றிய உண்மை நபர்களைக் கைது செய்யவில்லை என்றால் பெரிய போராட்டம் நடத்துவோம் என ஜெயக்குமார் எச்சரித்தார்…

சென்னை ராயபுரம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த டி.ஜெயக்குமார், எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு எம்ஜிஆர் சிலையின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிவப்பு வண்ணத்தைப் பூசி உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராயபுரம் அதிமுக பகுதி கழக செயலாளர் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தபடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலையுள்ள பகுதியில் அதிமுகவினர் அதிக அளவில் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

M. G. Ramachandran Statue | D. Jayakumar| Damaged | Paint | Chennai | Royapuram

எம்ஜிஆர் சிலைமீது பெயிண்ட் ஊற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலையினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். சிலையின் மீது இருந்த பெயிண்டினை துடைத்த அவர், சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆரை தெய்வமாகப் பார்ப்பதாகவும், எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்தும் அவர்மீது பயம் உள்ளதாகக் கூறிய அவர், அதிமுகவை எதிர்க திராணியற்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார். பெயிண்ட் ஊற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முடியாது எனவும், பெயிண்ட் ஊற்றிய உண்மை நபர்களைக் கைது செய்யவில்லை என்றால் பெரிய போராட்டம் நடத்துவோம் என ஜெயக்குமார் எச்சரித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *