
பேனா சிலை வைக்கச் செலவு செய்யப் பணம் உள்ளது, கார் ரேஸ் செய்யப் பணம் உள்ளது ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லை.ஒரு குடும்பத்தின் கருவூலத்திலிருந்து பணம் எடுத்தால் அனைத்து பிரிவுத் தொழிலாளர் பிரச்சினையையும் தீர்த்து விடலாமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.பின்னர் செய்தி அவர்களே சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தூண்டுதல் பேரில் தான் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடக்கிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,14 சங்கங்கள் போராட்டத்தில் உள்ள அவர்கள் 6 கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்.ஒரு கோரிக்கை 70 கோடி செலவு ஆகும்.
பேனா சிலை வைக்கச் செலவு செய்யப் பணம் உள்ளது, கார் ரேஸ் செய்யப் பணம் உள்ளது ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லை.ஒரு குடும்பத்தின் கருவூலத்திலிருந்து பணம் எடுத்தால் அனைத்து பிரிவுத் தொழிலாளர் பிரச்சினையையும் தீர்த்து விடலாம்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு அரசின் வருவாய் எல்லாம் சென்றால் எப்படி பணம் இருக்கும்.Sadist அரசாங்கம், அடுத்தவர்கள்மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இன்று கூடக் கன்னியாகுமரியில் அனுபவம் இல்லாத ஓட்டுனர் பேருந்தை ஓட்டிக் கடைக்குள் மோதுகின்றார்.
எல்லா பேருந்தும் எலும்பும் தோலுமாக உள்ளது. ஒரு புது பேருந்து கூட இல்லை.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டான்ஸ் போட்டுப் பார்க்கவா?ரெக்கார்ட் டான்ஸ் ஆட்டம், யூடியூபர் எல்லாம் வர வைத்து உள்ளனர்.
ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாது நரியின் சாயம் வெளுத்து விடும்.அதிமுக ஆட்சியில் நடந்த மாநாட்டில் மூன்று லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டது.தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை தருவதாகச் சொன்னீர்கள் அப்படி பார்த்தால் 3 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் அந்தப் பட்டியல் எங்கே?எவ்வளவு துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது அதை நிரப்ப முடியவில்லை, உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியவில்லை.போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு கருவூலத்திலிருந்து கொடுத்து இருக்க வேண்டியது தானே?
70 கோடி தான் ஒரு கோரிக்கை தான் முதலில் நிறைவேற்றக் கேட்கிறார்கள்.விடாப்பிடியாகப் பிடிவாத போக்கை விடியாத அரசு கடைப்பிடிக்கிறது. இதனைக் கைவிட்டு இவர்கள் எதிர்பார்க்கும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிஸைனையே மாற்றிவிட்டார்கள் எங்குப் பார்த்தாலும் அவர்கள் அப்பாவின் பெயரை வைத்துள்ளார், அது தமிழக மக்களின் தலையெழுத்தா?கேடு கெட்ட துக்ளக் அரசாங்கம் ஒரு அறிவும் இல்லை. அவசரபட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
899 பேர் தான் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்கள், இதைவிட அவர் தந்தையை அவரால் கேவலப்படுத்த முடியாது.அதில் நடிகர் ரஜினிகாந்தின் கமலும் எழுதிக் கொடுத்த ஸ்கிப்டை படித்து விட்டார்கள்.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சை முதலமைச்சராகக் கருணாநிதி ஆனது. கருணாநிதி உங்களால் தான் பதவிக்கு வந்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
இதுபோல ஸ்கிரிப்ட் கொடுத்துப் படிக்க வைப்பார்கள் என்று தான் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் தப்பித்து விட்டார்கள்.


