Vidaamuyarchi movie:நாளை நடிகர் அஜித்தின் புதிய படத்தின் அப்டேட்..ரசிகர்கள் உற்சாகம் !

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக இருக்கிறது.

சென்னை:தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

நாளை மாலை 7.03 மணிக்குப் படத்தின் அப்டேட்டை லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. படத்தின் முதல் பார்வைதான் வர இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகமாக அப்டேட் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *