Advertisements

கூலி படம் பார்த்த மு.க ஸ்டாலினுக்கு கௌதமி எச்சரிக்கை: சினிமா பார்க்க நேரம் இருக்கிறதா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது
இந்த திரைப்படத்தை நேற்று முன் தினமே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்த்து விட்டார் .சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திரைப்படத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர்.சுமார் இரண்டரை மணி நேரம் ஓடிய கூலி திரைப்படத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெகுவாக ரசித்துப் பார்த்தார்
படம் பார்த்த மு க ஸ்டாலின் பட குழுவினர் அனைவரையும் பாராட்டினார் படம் மிக நன்றாக இருக்கிறது நான் ரசித்து பார்த்தேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் .இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினருடன் மு.க ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார் . படத்தை பாராட்டிய முதல்வருக்கு நன்றி சார் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முன்னதாகவே கூலி திரைப்படத்தை பார்த்து மிகப்பெரிய மாஸ் படம் மக்கள் ரசித்து பார்ப்பார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் நடிகையும்அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளருமான கௌதமி கூலி படம் பார்த்த முக ஸ்டாலினுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மு க ஸ்டாலின் அவர்களே ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல உங்கள் உறவினர் கலாநிதி மாறனின் கூலி திரைப்படத்தை பார்த்து அதை விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்
இன்னொரு பக்கம் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குண்டு கட்டாக கைது செய்திருப்பது உங்கள் குண்டர் அரசின் உச்சமாகும்.கூலி படம் பார்ப்பதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதா? உங்களை வாக்களித்து முதல்வராக்கிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க நேரமில்லையா .நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கும் பொது மக்களுக்கு இதுதான் கதியா? வாக்கு கேட்டு அதே மக்களை மீண்டும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா ?
காவல்துறையை வைத்து நீங்கள் நிகழ்த்தும் அயோக்கியத்தனங்களை உடனடியாக நிறுத்துங்கள் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்துள்ளார்.இதேபோல் இணையதளத்தில் ஏராளமான பார்வையாளர்கள் தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை தீர்க்க நேரமில்லை ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் ரஜினி நடித்த கூலி படத்தை பார்ப்பதற்கு நேரம் இருக்கிறதா என்று கேட்டு ஏராளமான பதிவுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements



