பிரான்சில் கடந்த வாரத்தைப் போல் இன்றும் போராட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த 70 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் தலைநகர் பாரீஸ் உட்படப் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் சனிக்கிழமை பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதுடன் பல்வேறு இடங்களில் தீவைப்பும் நடைபெற்றது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி வன்முறை தலைவிரித்தாடியது.
இந்நிலையில் வார இறுதி நாளான இன்றும் இலட்சக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர், அரசுக்கு எதிரான குழுக்கள் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் வன்முறை தலைதூக்குவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் 70 ஆயிரம் காவலர்கள் முன்கூட்டியே குவிக்கப்பட்டுள்ளனர்.


