Check fraud:திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை!

Advertisements

சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.6 கோடி லட்சம் கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்துவதாகக் ககன் போத்ராவிடம் வழங்கிய காசோலை வங்கிக் கணக்கில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது பைனான்சியர் ககன் போத்ரா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 4-வது அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன் கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *