
Prime Minister of Canada Justin Trudeau | Sophie Gregoire Trudeau | Divorce
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்…
டொராண்டோ : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(51) மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர்(48) இருவரும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் சுருக்கமாகப் பதிவிட்டிருந்தனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், ‘ சோபியும் நானும் ஒரு உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
Prime Minister of Canada Justin Trudeau | Sophie Gregoire Trudeau | Divorce
நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசிப் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி’ என்று அதில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில், தம்பதியினர் சட்டப்பூர்வ பிரிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் ஆகிய இருவரும் 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சேவியர் (15) எல்லா கிரேஸ் (14) மற்றும் ஹாட்ரியன் (9) ஆவார்கள்.


