
கனடா அரசியல் ஆதாயத்திற்காகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதாக மத்திய அமைச்சர் ஜெயசங்கர் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டினார்.
ஐ.நா. பொதுச்சபையில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜெயசங்கர் கனடா குறித்து பேசுகையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தியாவில் பிரிவினைவாதங்களை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர்கள் ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள், அவர்களுக்கே எதிர்வினையாகி விடக் கூடாது எனத் தெரிவித்தார். ஐ.நா. சபையின் செயல் திட்டத்தைச் சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே வடிவமைத்துக் கொண்டிருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
நாம் அனைவரும், நமது மனங்களைச் செலுத்தினால் மாற்றலாம் என்றும், அனைவருக்கும் சமமான ஜனநாயக ரீதியான முறை இருந்தால் தான் சட்டங்களும் மதிக்கப்படும் என்றும் ஜெயசங்கர் தெரிவித்தார்.

